நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவிகளை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்று மாதம் உதவித் தொகை கிடைக்கப் பெறுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலவை வட்டம், அருந்ததிபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் ஷர் மிளா மற்றும் திலகவதி ஆகிய மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று இத்திட்டத்தில் பயன் பெற்று வருவது குறித்தும், உயர் கல்வித் தொகை மாதம் தவறாமல் கிடைக்கப் பெறுகிறதா என்பது குறித்தும் மாண விகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் கலந்துரையாடினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 198 மாணவியர்களும், 2022-23ம்
ஆண்டில் 2059 மாண வியர்களும், 2023-24ம் ஆண்டில் 2332 மாணவியர்களும், 2024–25 நடப்பாண்டில் 2077 மாணவியர்களும் என மொத்தமாக 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் 6666 மாணவியர்கள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோரும் கல்வி உதவித் தொகை ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கலவை வட்டம், அருந்ததிபாளையம் எம்ஜிஆர் நகரைச் சார்ந்த மாணவிகள் கூறியதாவது: என் பெயர் ஷர்மிளா (19). எனது அம்மா வீட்டு வேலை செய்கின்றார். அப்பா மாடு வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் என்னை படிக்க வைத்தும், குடும்பத்தை நடத்தியும் வருகின்றார்.
இந்நிலையில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதாந்திர உயர் கல்வி உதவித்தொகை 1000 ரூபாய் கிடைத்தது. இவற்றில் சிறிதளவு சேமித்து கணினி பயிற்சி மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்துள்ளேன்.
மேலும் படிப்புக்கு தேவையான புத்தகங்கள், உபகரணங்கள் வாங்குவ தற்கு உதவியாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
என் பெயர் திலகவதி (19). என்னுடைய தந்தை உடல் நலம் சரியில்லாத காரணத்தினால், என் னுடைய தாயார் கூலி வேலை செய்து தான் என்னை படிக்க வைக்கின் றார். புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் கல்வி உதவித் தொகை தமிழ்நாடு முதல மைச்சரால் கிடைக்கிறது. அவருக்கு நன்றி. இவ்வாறு கூறினர்.
இந்நிகழ்வினில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பா ண்டு வரையில் அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி பயின்று வரும் 6666 மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உயர்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பெண்கள் உயர்கல்வி பயிலவும், உயரவும் வழிவகுத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வினில் மாவட்ட சமூக நலன் அலுவலர் சாந்தி, புதுமைப் பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுசியா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.