அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அஜய் பிரவீன், அஞ்சலி, அருள்மொழி, அபிராமி, அபிஜித், எரிக்ஜான்ஜோசாண் டோ, கிருஷ்ணப்ரியா, மதுஸ்ரீ,ஸ்ரீராஜ், ஸ்ரீதர்ஷன், யமுனா ஆகியோர் கிராம தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ் வடசித்தூரில் தாங்கினர்.
அங்குள்ள கூட்டுறவு அலுவலகத்தில் கல்லூரி முதல்வர் சுதீஷ் மணாலில், இத்திட்ட ஒருங்கிணைபாளர் சிவராஜ், பேராசிரியர்கள் சத்யபிரியா, மணி வாசகம், சபரீஸ்வரி, கருப்பசாமி விக்ரம் வழிகாட்டுதலின் கீழ் பூச்சி நோய் குறைபாடுகளை வேறுபடுத்துவது, நுண்ணூட்டச்சத்து மற்றும் நானோ யூரியாவின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கதை விவசாயிகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் பேராசிரியர் பார்த்த சாரதி சிறப்புரையாற்றினார். விவசாயிகள் அவர்களது சந்தேகங்களை கேட்டு அறிந்தனர்.