fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம்-கோவை கிறிஸ்துமஸ் விழாவில் துணை...

தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம்-கோவை கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெந்தே கோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோ.வி.செழியன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதம பேராயர் டேவிட் பிரகாசம் உரையாற்றினார். எஸ்.பி.சி. தலைவர் பேராயர் எடிசன் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாமுவேல் செல்லப்பாண்டியன் திராவிடமும் கிறிஸ்தவமும் குறித்து பேசினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கும் மின்சார இணைப்பை வழிபாட்டு தலத் திற்குரிய விதிகளின் கீழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுத்தார்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்துமஸ் விழா எனக் கூறி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படிப்பு லயோலா கல்லூரி என்ற உதயநிதி, நானும் ஒரு கிறிஸ்துவன் என பெருமைப்படுகிறேன் எனக் கூறிய அவர், அனைத்து மதங்க ளும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன என்றார்.

திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் எனக் கூறிய அவர், கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல் வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நானும் ஒரு கிறிஸ்துவன் என்பதில் பெருமைப்படுகிறேன். இது பல சங்கிகளை கோபப்படுத்தும். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன.
அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள்.
என்னை கிறிஸ்துவன் என்று நினைத்தால் கிறிஸ்துவன், இஸ்லாமியன் என நினைத்தால் இஸ்லாமியன், இந்து என நினைத்தால் இந்து.

சமூக வலைத்தளங்கள் உட் பட அனைத்து ஊடகங்களி லும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருகின்றனர். சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி உள்ளதை சுட்டிக்காட்டிய உதயநிதி, இப்படி ஒரு நீதிபதி இருந்தால், நீதிமன்றத்தில் நியாயம் எப்படி கிடைக்கும்?
மதரீதியான அவதூறு பேச்சு பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதிமுக அதனை ஆதரிக்கவில்லை. இதன் மூலம் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியாகிறது.

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒரு தீர்மானம் கூட மத்திய பாஜக அரசை கண்டித்து இயற்றப்பட வில்லை என்பதே இதற்கு சாட்சி.
திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம். கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், திமுக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதனை தொடர்ந்து கிறிஸ் துமஸ் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் எஸ்.பி.சி. பொருளாளர் ஜான்சன் கிருபா கர பாண்டியன் உட்பட பல்வேறு பெந்தேகோஸ்தே சபைகளின் போதகர்கள்,சபை மக்கள் திரளாக கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img