ஆடி சிறப்பு விற்பனையை முன்னிட்டு, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக இரண்டு கலர் சட்டைகள் ரூ.995-க்கு என்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
இந்த சலுகையில், குறிப்பிட்ட ரகங்களில் உள்ள அரை கை அல்லது முழு கை சட்டைகளில், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான நிறம், வடிவமைப்பு, அளவு மற்றும் கை வகையைத் தேர்வு செய்து வாங்கலாம்.
முன்கூட்டியே தொகுக்கப்பட்ட செட்களுக்கு பதிலாக, விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கும் இந்த சட்டைகள் அலுவலகம், குடும்ப நிகழ்வுகள், பண்டிகை மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றவை.
இந்த ஆடி சிறப்பு சலுகை ராம்ராஜ் காட்டன் ஷோரூம்கள் மற்றும் முன்னணி ஜவுளிக்கடைகளில் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கிடைக்கும்.



