பியாஜியோ குழுமத் தின் இந்திய துணை நிறுவனமான பியாஜியோ வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ‘Apé E-City SWAP’ என்ற புதிய மின் ஆட்டோவை புதுச்சேரியில் அறிமுகப்படுத்தியது.
நடந்த விழாவில், முதல்வர் என்.ரங்கசாமி வாகனத்தை அறிமுகப்படுத்தினார். இதில் பியாஜியோ இந்தியா, இன் டோஃபாஸ்ட் எனர்ஜி மற்றும் பியாஜியோவின் அங்கீகரிக்கப்பட்ட டீல ரான ‘பியூச்சர் ஆட்டோ மொபைல்ஸ்’ நிறுவன அதிகாரிகள்பங்கேற்றனர்.
புதுச்சேரியில் மின் வாகனப் போக்குவரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த அறிமுகம் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக பியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடைசி மைல் போக்குவரத் துக்கான தூய்மையான, நம்பகமான மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து தீர்வை வழங்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப் பட்ட டீலரான ‘பியூச்சர் ஆட்டோமொபைல்ஸ்’ நிறுவனம், விற்பனை விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வலுப்படுத்த முக்கிய பங்காற்றி வரு வதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.



