திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற உள்ள ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன் னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் வந் தனா கார்க் தலைமையில் அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்ற கூட்டத்தில், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வரும் ஜூலை 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.33 மணிக்கு தொடங்கும் ஆடி பவுர்ணமி, ஜூலை 29-ம் தேதி (புதன்கிழமை) இரவு 8.58 மணி வரை நடைபெறுவதால், பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, கிரிவலப்பாதை மற்றும் கோவில் வளாகங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, மின்வசதி, மருத்துவ முகாம்கள், 108 ஆம்புலன்ஸ் சேவை, கூடுதல் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக ஏற்ப டுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத் தப்பட்டது.மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் எவ்வித சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்ய தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், போதுமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண்’ அதிர டிப்படையினர் கிரிவலப்பாதை முழுவதும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், நிழற்பந்தல்கள் மற்றும் குடிநீர் வசதிகள் அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.



