கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பெண்கள் மேம்பாட்டு மையம் மற்றும் லியோ கிளப் சார்பில், ஃபெமோரா-2023 என்ற ‘சர்வதேச மகளிர் தின விழா’ கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது.
கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக் குமார் தலைமை வகித்தார். பெண் கள் மேம்பாட்டு மைய செயலர் முனைவர் ஆர்.ரேகா வரவேற்றார். தலைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினர் டாக்டர் குரு மித்ரேஷிவா பேசியதாவது:
மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சி யைத் தேடுகிறோம். நமக்கு விவரம் தெரிந்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சி, அதன் பின்னர் குறிப்பிட்ட வயது இடைவெளியில் அடைந்த மகிழ்ச்சி, தற்போது அனுபவித்துகுக் கொண்டிருக்கிற மகிழ்ச்சி என்னவென்று அளவிட்டால் அதில் ஏராளமான மாற்றங்களைப் பார்க்க முடியும்.
ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை நம்முடைய மகிழ்ச்சி குறைந்து கொண்டே வந்திருப்பதை உணரலாம். படிப்பு, வேலை, சொந்த வீடு, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்த்த அனைத்தும் கிடைத்திருந்தாலும் மகிழ்ச்சி மட்டும் நிலைத்திருக்காது.
நாம் எதிர்பார்ப்பதைப் போல நம்முடைய பெற்றோர், வேலை வாய்ப்பு, வாழ்க்கைத் துணை நடந்து கொண்டால் மகிழ்ச்சி இருக்கும். அவர்கள் நடத்தையில் சற்று வேறு பட்டாலும் மகிழ்ச்சி மறைந்து விடும்.
சரியான புரிதல், ஞானத்தை நமக்குள் விதைத்து விட்டால் மகிழ்ச்சி தேடி வந்துவிடும். யார் எப்படி இருந்தாலும் நாம் மகிழ்ச்சியானவர்களாக இருக்கலாம் என்றார்.
மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பெண்கள் மேம்பாட்டு மையப் பொருளாளர் முனைவர் பி.வித்யா நன்றி கூறினார்.