fbpx
Homeதலையங்கம்அரசுக்கு தொல்லை தருவது தான் ஆளுநர் வேலையா?

அரசுக்கு தொல்லை தருவது தான் ஆளுநர் வேலையா?

திராவிட தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்று அமையப் பெற்ற தி.மு.க. ஆட்சி கடந்த 22 மாதங்களில் நிகழ்த்திய சாதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாகவும் மு.க.ஸ்டாலின் நம்பர் 1 முதல்வராகவும் பெயர்பெற்றுத் திகழ்கிறார். நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்.

இதனை பொறுத்துக் கொள்ளமுடியாமல்…சகித்துக் கொள்ள முடியாமல், குறுக்கு வழியில் ஆளுநர் மூலம் இடையூறு செய்கின்றனர். திமுக ஆட்சியை கலைக்க சதி நடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினே குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆளுநர் மூலம் அன்றாடம் ஆட்சியைச் செயல்படுத்த விடாமல், தேவையற்ற வீண் சர்ச்சைகளைப் பேசியும், சட்டமன்றத்தில் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக்களை பல மாதங்கள் கிடப்பில் போட்டும் இடையூறு செய்கின்றனர்.

அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் தமிழ்நாடு அரசின் ஓர் அங்கம் என்பதை அவரே மறந்துவிட்டு, அவரே எதிர்க்கட்சித் தலைவர் போன்று நாளும் போட்டி அரசினை நடத்திட முயல்கிறார்.

ஆனால், எதிர்ப்பு நெருப்பில் புடம்போடப்படும் பொன் இந்த மண். ‘திராவிட மாடல்’ தமிழ்நாட்டு அரசும், அதற்கு ஆதரவாகக் கொள்கை லட்சியக் கூட்டணியும் இருப்பதைப் புரியாமல் மின்மினிப் பூச்சிகள் மின்சாரத்தைத் தாக்கி வெற்றி பெற நினைத்தால் நடக்குமா?

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில், பா.ஜ.க., சங் பரிவார்களின் முகமூடி கழன்று வீழ்ந்துவிட்டதைக் கண்டு உலகம கைகொட்டி சிரிக்கிறது! கண்ணாடி மாளிகைக்குள் இருந்து கொண்டு கற்கோட்டைகள்மீது கல்லெறியாதீர்.

தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது. 2024 தேர்தலில் இல் ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்.

தமிழ்நாடு இதற்கான திருப்பத்தை இந்திய அளவில் அளிக்கும்!

படிக்க வேண்டும்

spot_img