fbpx
Homeபிற செய்திகள்ஸ்மைல் அமைப்பு சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கு

ஸ்மைல் அமைப்பு சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கு

தூத்துக்குடி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மைல் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மகளிர் தினம் 2023 புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் பாலின சமத்துவம் குறித்த கருத்தரங்கம் மற்றும் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ஸ்மைல் அமைப்பின் கள அலுவலர் தங்கம் வரவேற்றார்.

கணேஷ் நகர் ஆரம்ப சுகாதார நிலைய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர்த்தி பெண்களுக்கு தேவையான மருத்துவ குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மகளிருக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்து மகளிர் திட்ட சிஇஓ சரவணபாமா துவக்க உரையில் எடுத்துக் கூறினார்.

சோரீஸ்புரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜாய் பெல் பெண்கள் எவ்வாறு சமூகத்தில் வாழ வேண்டும் என்பதை குறித்தும், எஸ்.ஏ.வி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினார்கள்.

குழந்தைகள் பாதுகாப்பு

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு பற்றி எடுத்துரைத்தார். நிகழ்வில் சர்வட் பள்ளி நிர்வாகி அருட் சகோதரி வின்சி, ஸ்மைல் இயக்குநர் ஆல்பர்ட் சேவியர் ஆகியோர் துறைவாரியாக பெண்களின் பெயர்களை கூறி அவர்களின் சாதனைகள் எடுத்துரைத்து அவர்கள் போல் நம்முடைய பெண்கள் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.

புனித மரியன்னை கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆரோக்கியம் பீட்டர் மகளிருக்கான சமூக விழிப்புணர்வு விளக்கவுரை வழங்கினார். தொடர்ந்து 32 மகளிர் குழு பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன

இப்போட்டிகளில் வென்ற மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 250 மகளிர் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

விழா நிறைவில் சிஆர்பி மகளிர் திட்ட அலுவலர் சத்யா நன்றியுரை வழங்கி னார். விழா ஏற்பாடுகளை ஸ்மைல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, பயிற்றுனர் சுமதி, மகளிர் திட்டம் ஸ்ரீபிரியா, மரிய வெண்ணிலா மற்றும் பரத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img