சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் மாவட்ட ரஜினிகாந் ரசிகர்களால், நலத்திட்ட உதவிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
இது குறித்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி கனி ரெசி டன்சியில் நேற்று மாலை மாவட்ட பொறுப்பாளர் விஜய் ஆனந்த் ஏற்பாட்டில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் டிசம்பர் 11ம் தேதி ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயாணா தலைமையில் 1110 பயனாளிகளுக்கு நலஉதவிகள், விஜய் ஆனந்த் ஏற்பாட்டில் வழங்கப்படவுள்ளது.
மற்றும் 500 பெண்கள் பங்குபெறும் பால்குடம் எடுக்கும் நிகழ்வு பாலவிநாயகர் கோவில் தெருவிலிருந்து சிவன் கோவில் வரை நடை பெறவுள்ளது என மாவட்ட நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு நிகழ்ச்சிகள்
இந்த பிறந்தநாள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்த ஆலோசனைகளை மாவட்ட இணை செயலாளர் தவமனி, முன்னாள் பேச்சாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர் பெரியசுவாமி நாதன், வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், ஆகியோர், மாவட்ட நிர்வாகிகள் பாபா ஜெயபால், கண்ணன், ரமேஷ் கார்த்திகேயன், கனி ஜெயம், புதிய துறைமுகம் லெட்சுமணன், ராஜா, லெட்சுமணன், வெலிங்டன், மாரிமுத்து, மற்றும் கிளை சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தனர்.



