என்சிசி 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெவ்வேறு பகுதியில் இருந்து 15 தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக குன்னூர் வி.பி.தெரு பகுதிக்கு வந்தடைந்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி நடத்தும் 75 ஆவது ஆண்டு என்சிசி தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி குன்னூர் பகுதியில் உள்ள 15 தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை திரட்டி, அந்தந்த பள்ளியில் இருந்து பேரணியாக குன்னூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வி.பி தெரு பகுதிக்கு வரவழைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சிறப்பு உரையாற்றினார். அவர் என்சிசி மாணவ மாணவிகள் மத்தியில் என்சிசி துவங்கிய வருடம் மற்றும் அதன் நோக்கம் சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு விழிப்புணர்வாக பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் நவீன அடி மைத்தனத்தை ஒழித்தல் சம்பந்தமாக கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 15 பள்ளிகளும் 250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட 15 பள்ளிகளுக்கும் நினைவு பரிசினை அமைச்சர் வழங்கினார்.