கோவை பிஎஸ்ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி உடற் கல்வி இயக்குநர் டாக் டர் எம்.ஜெய சித்ரா அவர்கள், ஜூலை 24 முதல் 27, 2025 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஸ்டீபன் கோஷி ஜாக்கப் நினைவு சர்வதேச மாஸ்டர்ஸ் கூடைப்பந்து போட்டி யில் இரண்டு பிரிவுகளில் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்.
45+ வயது பிரிவில், பியூஷன் இண்டியா அணியில் இடம்பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
40+ வயது பிரிவில், கோயம்புத்தூர் Squad அணி சார்பில் விளையாடி, இலங்கை அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இரு பிரிவுகளிலும் வெற்றிபெற்று, தேசிய மற்றும் மாநில அளவில் பிஎஸ் ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.



