கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 56 வது வார்டு, ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.) முன்னிலையில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் உதவி செயற் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, வார்டு உதவி பொறியாளர் கோபிநாத், ஒண்டிப்புதூர் பகுதி திமுக பொறுப்பாளர் கஸ்தூரி அருண், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், 56வது வட்ட திமுக செயலாளர் சுரேஷ்குமார், சின்னச்சாமி, சிங்கை சௌந்தர், துணைச் செயலாளர் கனகராஜ், பட்டாசு பாலு, சிவகுமார் ராஜேந்திரன், சதீஷ், இளைஞர் அணி அன்பழகன், டேவிட் வில்சன், முருகேசன், செந் தில்குமார், வணங்காமுடி, சரஸ்வதி, கிருஷ்ணப்பன், குமார், தமிழரசி, சசிகலா, சுசீலா, சுதிர், தங்கவேல், கலாமணி, சண்முகம், சிவகாமி, சுந்தரம், மற்றும் BLA 2, பாகம் முகவர்கள் கழக நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



