Homeபிற செய்திகள்மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளையுடன் கோவை அரசு மகளிர் கலை - அறிவியல் கல்லூரி இன்று...

மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளையுடன் கோவை அரசு மகளிர் கலை – அறிவியல் கல்லூரி இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, புலியகுளத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லாப நோக்கற்ற அமைப்பான மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளையுடன் இன்று (27ம் தேதி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பின்தங்கிய சமூக-பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த கல்லூரியின் இறுதி ஆண்டு இளங்கலை மாணவியருக்குப் பெரிதும் பயனளிக்கும். மாணவியர் சான்றிதழுடன் கூடிய பயிற்சியையும், எதிர்கால வேலைவாய்ப்பை நோக்கிய தொழில் வழிகாட்டுதலையும் பெறுவார்கள். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவியும் அடங்கும்.


கல்லூரி மாணவர் குழு மற்றும் மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை ஊழியர்களின் முன்னிலையில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கிளாரா குணபூரணி சற்குணர் மற்றும் மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளையின் கிளஸ்டர் மேலாளர் விஜய் தங்கராஜு ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img