fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி நிறுவனர் தின கொண்டாட்டம்

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி நிறுவனர் தின கொண்டாட்டம்

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி அதன் நிறுவன தினத்தை நேற்று கொண்டாடியது. 31 ஆண்டுகளாக நிறுவன தந்தைகளின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் தங்களின் தொலை நோக்குப்பார்வையை நிஜமாக மாற்றி இருக்கிறது.
இந்த சிறப்பு நிகழ்ச்சி நிறுவனத்தின் தொடக்கத்தை நினைவு கூருவதற்கு மட்டுமல்லாமல், பலசகாப்தங்களாக அதன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் சாதனைகளையும் கொண்டாடுகிறது.

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயதீபா வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பி.எஸ்.ஜி அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீஎல். கோபால கிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார். மேலும் சுகாதாரம் மற்றும் செவிலியர் கல்வித்துறையில் பி.எஸ்.ஜி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப் புகளை எடுத்துரைத்தார். நிறுவன அறங்காவலர் மற்றும் தலைவர் ஸ்ரீஜி.ஆர். கார்த்திகேயன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


தமிழ்நாடு செவிலியர்கள் கவுன்சிலின் பதிவாளர் பேராசிரியர் டாக்டர் ஆன்னி கிரேஸ்கலைமதி இவ்விழாவில், செவிலியர் தொழிலில் உள்ள சவால்களையும் இந்தத்துறையில் ஈடுபடும் ஒவ்வொரு செவிலியரும் பின்பற்ற வேண்டிய 5 வழிகாட்டும் கொள்கைகளின் முக்கியத்து வத்தை வலியுறுத்தினார்.

இந்த விழாவில், செவிலியர் துறையில் தங்கள் பங்களிப்புகளைச் செய்து புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் லூர்து நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில்குமார், இந்திய பொது சுகாதார நிறுவனம் ஜோஷிபிரபு ஆகியோர் தங்கள் சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள், எதிர்கால செவிலியர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பேசினர்.

விழாவின் போது முன்னாள் மாணவர் இதழ் -2025 மற்றும் கல்லூரியின் புதிய இணையதளம் வெளியிடப்பட்டது.
கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img