கரூரை அடுத்த அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகம் முன்பு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் மக்களிடையே குழந்தைகள் மேம்பாட்டுக்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகளுக்கான மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்தும் பல்வேறு நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடியும் பொது மக்களை கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது குழந்தை திருமணம் செய்யக்கூடாது எனவும்,பெண்களுக்கு 18 வயதுக்கு பிறகு தான் திருமணம் நடத்த வேண்டும் எனவும், அதை மீறி குழந்தை திருமணத்தை நடத்த முற்பட்டால் இந்த திருமணத்தில் பங்கேற்க கூடிய அனைத்து உறவினர்களும், திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை, திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதர், என அனைவருமே குற்றவாளிகள் எனவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் திருமண வயது வந்த பிறகே பெண்களுக்கு திருமணம் நடத்த வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்தனர்.



