மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள கடலூர் மாவட்ட காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தபால் வாக்கு செலுத்தினர் கடலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று நேரில் வந்து வாக்களிக்க இயலாத காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர் அதன்படி கடலூரில் 730,பண்ருட்டியில் 394,நெய்வேலியில் 256, குறிஞ்சிப்பாடி 325, விருத்தாசலம் 101,திட்டக்குடி 37 என மொத்தம் 1,843 காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தபால் வாக்குகள் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம், கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து தபால் வாக்கு செலுத்தி தனது ஜனநாயகக் கடமையாற்றினார்.தொடர்ந்து, போலீசார் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர்.
அப்போது,மாவட்ட தேர்தல் அலுவலர் அ.அருண் தம்புராஜ், உதவி தேர்தல் அலுவலர் அபிநயா,வட்டாட்சியர் பலராமன்,டிஎஸ்பி பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர் இதேபோல, பண்ருட்டி, நெய்வேலி,சிதம்பரம், விருதாச்சலம்,திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர் இதேபோல் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காவல்துறையினர் முன்னாள் ராணுவத்தினர் ஊர் காவல் படையினர் தபால் வாக்கு செலுத்தினர் இதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஷ்மிராணி வட்டாட்சியர் ஹேமாஆனந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
காவல்துறையினர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஊர்க்காவல் படையினர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.