சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் இருக்கையின் சார்பில், அம்பேத்க ரின் 134-ஆவது பிறந்த நாள் விழா பல்கலைக்கழக மைய நூலக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அம்பேத்கர் இருக்கை பேராசிரியர் க.சௌந்திரராஜன் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் விழா தலைமையுரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் அம்பேத்கர் வகுத்த சட்டம், பொருளாதார கொள்கை, சமூகநீதி ஆகியவற்றை பயன்படுத்தி எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் சு.அமிர்தலிங்கம் கலந்துகொண்டு விழா சிறப்புரையாற்றினார்.அவர் தனது உரையில், மாணவர்கள் ஆராய்ச்சிக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக அம்பேத் கர் பற்றி ஆய்வு செய்து, எதிர்கால இந்தியாவில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக,அம்பேத்கர் உருவப்படத்துக்கு துணை வேந்தர் ராம.கதிரேசன் மற்றும் புல முதல்வர்கள்,இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு சங்க உறுப்பினர்கள்,ஊழியர்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை துணைவேந்தர் ராம.கதிரேசன் வழங்கினார்.பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் அரங்க பாரி வாழ்த்துரை வழங்கினார். அம்பேத்கர் இருக்கை யின் உதவிப் பேராசிரியை வீ.ராதிகாரணி நன்றி கூறி னார். விழாவில் துணைவேந்தரின் நேர்முக செயலர் ஜே. ஹெச்.பாக்கியராஜ் மற்றும் முதுநிலை மாணவர்கள் பங்கேற்றனர்.