நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், இதன் காரணமாக பொதுமக்கள் மதிய நேரத்தில் வீட்டிற்குள் முடங்கினர். தொடர்ந்து வெயில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை பள்ளிபாளையத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு சாலை, காடச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சாரல் மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.