சூலூர் வடக்கு ஒன்றியம், மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பொன்னாண்டாம் பாளையம் பகுதியில், மோப்பிரிபாளையம் பேரூராட்சி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட், ஜி.கே.டி தொண்டு நிறுவனம் கோவை, உயிர் சேவை மையம் மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி ஊர் பொதுமக்கள் இணைந்து கரிசை வனம், கணபதி வனம், லட்சுமி வனம் மற்றும் எட்டு ஏக்கர் பரப்பளவில் 2000 மரக் கன்றுகளுடன் தொடங்கப்பட்ட அம்மன் வனம், அம்மன் வனம் 2 (சுதந்திர வனம்) திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, ரூ.12 லட்சம் மதிப்பீட்டில், பேரூராட்சிக்குட்பட்ட 57 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சாலையோரம் 3,200 மரக்கன்றுகள் நடும் பசுமை சாலை திட்டம் தொடக்க விழா நிகழ்வு மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் கே.பி.சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் எல்.எம். டபிள்யூ. நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்ட பொறுப்பாளர் ராஜ்குமார், விஜய் புவனேஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ், மோப்பிரிபாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ், அலுவலக உதவியாளர் சாமிநாதன், சரவணன், கௌசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், வாகை அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஷ்யம், சுல்தான் பேட்டை வின்ட்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



