ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மன்ற பதவிகள் ஏற்பு விழா நடைபெற்றது. இதில் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.எஸ்.சதீஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கல்லூரியின் நிர்வாகி சி.பாலசுப்பிரமணியன், முதல்வர் முனைவர் வி.பி.நல்லசாமி மற்றும் நிர்வாக அலுவலர் முனைவர் எஸ்.லோகேஸ் குமார், சமூகவியல் துறைத் தலைவர் முனைவர் யாஷிர் அஸ்ரப் ஆகியோர் மாணவர் மன்ற நோக்கம் – கொள்கை குறித்து விளக்கவுரை ஆற்றினர்.



