தேனி தனியார் ஓட்டலில் மக்கள் சமூக நீதி பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் மாநில அமைப்பாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில அவைத் தலைவர் சின்னாண்டி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். மற்றும் மாநில ஆலோசகர் கணேசன், தேனி மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட உதவி செயலாளர் காமாட்சி, மாவட்ட பொருளாளர் வினோத் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளும் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக இமயம் வேளாண்மை கல்லூரி தாளாளர் ஆண்டி, திருப்பூர் தொழில் அதிபர்கள் ராஜசேகர், புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் போடி ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து நிர்வாகிகள் தெரிவித்ததாவது:
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று 40 வருடத்திற்கு முன்பு கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர் தொல் திருமாவளவன் கூறியது இன்று நிறைவேறி உள்ளது. சமூக நீதியில் அக்கறை கொண்ட விடுதலைச் சிறுத்தைகளின் மாநில தலைவர் திருமாவளவனுக்கு தேனியில் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டநான்கு சிறுத்தைகள் கொண்ட நினைவுச்சின்னம் வழங்கப்பட உள்ளது.
இந்த பாராட்டு விழாவில் தமிழகத்தின் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா. நிர்மல் குமார். வன்னியரசு மற்றும் கூட்டணி கட்சியின் சேர்ந்த தலைவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னோடிகள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக தேனி மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட உள்ள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



