fbpx
Homeபிற செய்திகள்13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கோவை எஸ்கேஏ அணி

13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கோவை எஸ்கேஏ அணி

13 வயதுக்குட் பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கோவை எஸ்கேஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சூப்பர் கிங்ஸ் அகாடமி (எஸ்கேஏ) மதுரை, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைத்து, மதுரையில் 13 வயதுக்குட் பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்தியது.

இப்போட்டியில் எஸ்கேஏ ட்ரோம், எஸ்கேஏ மதுரை, எஸ்கேஏ தேனி மற்றும் எஸ்கேஏ கோவை ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன. போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன.

தொடர்ச்சியான விறுவிறுப்பான ஆட்டங்களுக்குப் பிறகு, எஸ்கேஏ கோவை அணி தொடர் முழுவதும் தனது சிறந்த ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்தத் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்களில், சுதர்ஷன் 4 இன்னிங்ஸ்களில் 440 ரன்கள் குவித்து ‘சிறந்த பேட்ஸ்மேன்’ விருதைத் தட்டிச் சென்றார். அதேபோல், தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நித்திக் ‘சிறந்த பந்துவீச்சாளர்’ விருதைப் பெற்றார். மற்றொரு குறிப்பிடத்தக்க வீரரான மித்ரன் ஆறுவேல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தனது அணியின் வெற்றிப் பயணத்திற்கு முக்கியப் பங்களிப்பை செய்தார்.

இந்த வெற்றிகரமான சாம்பியன்ஷிப் பயணத்திற்கு பயிற்சியாளர் விஷ்ணு வழிகாட்டினார். அவரது தலைமைத்துவம், பயிற்சி மற்றும் ஊக்கம் ஆகியவை அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கும் ஒட்டுமொத்த வெற்றிக்கும் முக்கியப் பங்காற்றின.

படிக்க வேண்டும்

spot_img