புதுடெல்லியில் இயங்கிவரும் இந்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை சபையின் உறுதுணையுடன் மாணவர்களின் புதிய சிந்தனையினைத் தூண்டி தொழில்நுட்ப படைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் “ஏஐசிடிஈ ஐடியா லேப்” என்கிற பெயரில் நவீன தொழில் நுட்ப ஆய்வகத் துவக்க விழா நடைபெற்றது.
கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். மேலும் விழாவில் தமிழ்நாட்டின் மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கழக செயலாளர் முனைவர் எஸ். வின்சென்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன தொழில் நுட்ப ஆய்வகத்தினை திறந்து வைத்தார்.
இந்தியாவில் நன்கு செயல்பட்டு வரும் ஆய்வகம் மற்றும் வகுப்பு வசதிகள் கொண்ட பொறியியல் கல்லூரியினைத் தேர்ந்தெடுத்து ரூ.பாய் 90 லட்சம் நிதி ஆதாரத்தினை அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை சபை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் நந்தா பொறியியல் கல்லூரிக்கு நிதி கிடைத்துள்ளது.
இந்த நிதி உதவியின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சியினை ஊக்குவித்து செய்முறை மற்றும் புதிய தொழில்நுட்ப படைப்புகள், தயாரிப்பு மற்றும் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் ஆர்வத்தினை தூண்டுகிறது. மேலும் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் போது ஆராய்ச்சியில் எதிர்கொள்ளக் கூடிய சவால்களை முறியடித்து மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது.
இதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர் யு.எஸ். ரகுபதி, புலமுதல்வர்கள் சி.என்.மாரிமுத்து, எம் ஈஸ்வரமூர்த்திக்கு அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்களான எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.



