கோவை காந்திபுரம் பகுதி யில் உள்ள பெந்தெ கொஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் எஸ்.பி.சி.யின் பல்வேறு கோரிக்கைகளோடு பிரதம பேராயர் டேவிட் பிரகாசம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
அனைத்து சமூகத்தின் மக்கள் மத்தியில் எந்தவிதமான வன்முறையும் ஏற்றத்தாழ்வும் இல்லாமல் மத நல்லிணக்கம் ஏற்படுத்திக்கொடுத்த தமிழக முதல்வருக்கு பெந்தெகொஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பாக மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து சமூகத்தினர் பாராட்டும் வகையில் கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாயத்திற்கு பாதுகாப்பு தந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நன்றாக பராமரித்து வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பாக மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசாணை நிலை எண். 15 சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்ட நலத்துறையி னால் 30.1.2024 அன்று தமிழக முதல்வர் அவர்களால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கிறிஸ்தவ சமத்துவ கல்லறைத்தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. விரைவில் அரசு செய்து தரும் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ வழி பாட்டு தலங்களுக்கும் மின்சார இணைப்பை வழிபாட்டு தலத் திற்குரிய விதி 2சி எண்ணின் படி அனுமதி வழங்க வேண்டுகிறோம்.
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கட்டிட அனுமதியை உடனடியாக எந்தவிதமாக தடையுமில்லாமல் சொந்த இடத்தில் கட்டுவதற்கு அரசு துரிதமான வழிமுறைகளை வகுத்து தர அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
கிறிஸ்தவ ஆலயங்களும் மத வழிபாட்டுத் தலங்களும் ஊழியர்களும் தாக்கப்படும் போது தாக்குதலுக்கு உள்ளா கும் தன்னார்வ தொண்டர்களுக்கு ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் அரசாங்கம் பொறுப்பெடுத்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து பாதிக் கப்பட்ட ஆலயத்தை மறு சீரமைப்பு செய்து தர வேண்டுகிறோம்.
தமிழகம் முழுவதும் நகரங்கள், கிராமங்கள், குக்கிரா மங்களில் நமது தமிழக முதல்வர் அறிவித்த திட்டத்தின்படி போதையில்லாத தமிழகம் உருவாக்குவதற்கு கிறிஸ்தவ அமைப்புகளின் சார்பில் நடத்து கின்ற நற்செய்தி
பணிகளுக்கு எந்தவிதமான தடை ஏற்படாத வண்ணம் மத நல்லிணக்கத்தின் அடையாளத்தை உறுதிபடுத்தக் கேட்டுக்கொள்ளுகிறோம். அத்துடன் பாதுகாப்பு வழங்கவும் வேண்டிக்கொள்கின்றோம்.
தமிழக முதல்வர் அவர்களின் நன்மதிப்பு திட்டமான போதை ஒழிப்பு பணிக்கு பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றம் மூலமாக சமுதாய பணியாற்ற அனுமதி கேட்டுக்கொள்ளுகிறோம்.
வாகனத்தின் மூலமாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள் அனைத்து இடங்களிலும் போதை ஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு கூட்டம் நடத்த எங்களுக்கும், எங்கள் வாகனத்திற்கும் அனுமதி வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது பெருகிவரும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தின் பகுதிகளில் நான்கு திசைகளில் கல்லறைகளுக்கான இடம் மிகமிக அவசிய தேவையாகிறது.
இதை கருத்தில் கொண்டு எஸ்பிசி பெந்தெகொஸ்தே சபைகளுக்கு இடம் ஒதுக்கி தர கேட்டு கொள்கிறோம்.
2025ம் ஆண்டில் 5வது தேசிய மாநாடு வெகு சிறப்பாக எஸ்பிசி சார்பில் நடைபெற இருப்பதால் தாங்கள் தலைமை தாங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.