fbpx
Homeபிற செய்திகள்காவேரிப்பட்டணத்தில் நடைபாதை கடைகள், சந்தைக்கு மாற்றம்

காவேரிப்பட்டணத்தில் நடைபாதை கடைகள், சந்தைக்கு மாற்றம்

காவேரிப்பட்டணம் பாலக்கோடு சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து சாலையின் இருபுறமும் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நடைபாதை கடைகள் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தன. இந்த நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை ஏற்று காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இணைந்து நடைபாதையில் இருந்த கடைகளை அகற்றி காலியாக இருந்த வார சந்தை நடைபெறும் இடத்திற்கு மாற்றினர்.

பேரூராட்சி தலைவரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் சந்தையில் பொருட்களை வாங்க வந்த பொது மக்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நகர பிரமுகர் செந்தில்குமார், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், தலைமை எழுத்தர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img