தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு கோவையில் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஒண்டிபுதூரில் உள்ள கோவை மண்டல தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய இந்த முகாம் வரும் 22ம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவிற்கு கர்னல் இராமநாதன், கோவை மண்டல தலைமை ராணுவ அதிகாரி, மற்றும் டாக்டர் சரவணபிரியா RMO, கோவை அரசு மருத்து வக்கல்லூரி ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படைதின சிறப்பு மற்றும் இரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
மேஜர் அசோக்குமார் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததானம் நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
கோவை, அரசு மருத்துவக்கல்லூரி அலுவலர்கள் உதவியுடன் சுமார் 60 யுனிட்டுக்கும் மேலாக நேற்று இரத்தவங்கிக்கு இரத்தம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வருகின்ற 22ம் தேதி வரை இந்த இரத்ததானம் நிகழ்வு நடைபெற உள்ளது. 1000-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் இரத்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பட்டாலியன் இராணுவ அதிகாரிகள், ஜேசிஓ-க்கள் இராணுவ அலுவலர்கள், தேசிய மாணவர் படை அலுவலர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.