fbpx
Homeபிற செய்திகள்நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் குருதிநாளச்சிரை -டாக்டர் வருண் சுந்தரமூர்த்தி எச்சரிக்கை

நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் குருதிநாளச்சிரை -டாக்டர் வருண் சுந்தரமூர்த்தி எச்சரிக்கை

நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் குருதிநாளச்சிரை நோய் குறித்து பொது மற்றும் தொற்று நோய் மருத்துவரான டாக்டர் வருண் சுந்தரமூர்த்தி கூறுகையில், “நீரிழிவு நோயாளிகளைத் தாக்கும் நாள்பட்ட குருதிநாளச் சிரைப் பற்றாக்குறை மற்றும் ஆழமான குருதி நாளச் சிறை ரத்த உறைவு உள்ளிட்ட குருதிநாளச் சிரை நோய்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், பெரும்பாலும் இவை கவனிக்கப்படாத சிக்கல் களாக மாறி வருகின்றன.

கோயம்புத்தூரில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதால், குருதிநாளச் சிரை நோய்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்திற்கு அச்சுறுத்தலைத் தருகின்றன. இந்தச் சிக்கல்கள் குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்து கின்றன. உரிய நேரத்தில் தரமான சிகிச்சை அளிக் கப்படா விட்டால், குருதி நாளச் சிரை புண்கள் போன்ற கடுமையான விளைவுகளுக்கு வழிவ குக்கும், பின்னர் அவற்றை நிர்வகிப்பது கடினம் என்ப துடன், பெரும்பாலும் தொற்றாக மாறுகின்றன.

கோயம்புத்தூரில் உள்ள பல நீரிழிவு நோயாளிகள் உடல் பருமனுடன் இருப்பதால், இது குருதிநாளச் சிரைக் கோளாறுகளின் அபாயத்தை இன்னும் அதிகரிக்கிறது.

கோயம்புத்தூரின் சுகாதார அமைப்பு குருதிநாளச் சிரை ஆரோக்கியம் உட்பட, அதிகரித்து வரும் நீரிழிவு விகிதங்களைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதுடன், நீரிழிவு பராமரிப்புக்கான முழுமையான அணுகுமுறையும் அளிப்பதால், நோயாளிகளின் மேம்பட்ட விளைவுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img