fbpx
Homeபிற செய்திகள்ஓட்டப்பிடாரம்: மாட்டு வண்டி போட்டி

ஓட்டப்பிடாரம்: மாட்டு வண்டி போட்டி

ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்ஜிஆர் மன்ற செயலாளரும் முன்னாள் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினருமான மோகனின் தந்தையான குண்டன் பெருமாளை எம்ஜிஆர் ஓட்டப்பிடாரம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமித்தார்.

அவரின் மறைவுக்கு பின் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைந்திட இரவு பகல் பாராது கழகபணியாற்றிய குண்டன் பெருமாள் மறைந்ததை முன்னிட்டு அவரது 17 வது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் முன்னாள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான மோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூஎம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு எம் எல் ஏ பேசும்பொழுது, தற்போது திமுக வசம் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியை வருகின்ற 2026 இல் நடைபெறக்கூடிய சட்ட மன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின், 4.1/2.ஆண்டு கால நல்லாட்சி சாதனைகளை ஓட்டப்பிடாரம் மக்களிடம் எடுத்து கூறி மீண்டும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியை அதிமுக சட்ட மன்ற தொகுதியாக மாற்றிக் காட்டுவோம் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் மற்றும் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினருமான கவியர சன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான வீரபாண்டி பி கோபி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் போடுசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்க றிஞர் தினேஷ்குமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன்,
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கண்ணன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் குறுக்குச்சாலை ஐயப் பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ஆறுமுகசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜேந்திரன், கடம் பூர் கோபி, முருகன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img