fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் திறப்பு

திருவண்ணாமலையில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, சங்கீதா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.பாரத சக்கரவர்த்தி, கே.குமரேஷ் பாபு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி பி.மதுசூதனன், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.எம்.சுதாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.க.தி.சரவணன் (கலசப்பாக்கம்), வழக்கறிஞர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img