fbpx
Homeபிற செய்திகள்எஸ்.சி, எஸ்.டி பெற்றோர்களின் ஆண்டு வருமானத்தை உயர்த்திட கோரி மனு

எஸ்.சி, எஸ்.டி பெற்றோர்களின் ஆண்டு வருமானத்தை உயர்த்திட கோரி மனு

முன்னாள் மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார், மாநில அரசின் தூய்மை பணியாளர் மறு வாழ்வு நல கண்காணிப்பு குழு உறுப்பினர் இரா.வீரவேந்தன், வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர்
தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் தேசிய உறுப்பினர் வேடப்பள்ளி ராமசந்திரகாருவிடம் சென்னை விருந்தினர் மாளிகையில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எஸ்.சி, எஸ்.டி மாணவ மாணவியர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2. 5 லட்சமாக உள்ளது. ஆனால் பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை பெற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 8 லட்சமாக உள்ளது.

இந்நிலை முற்றிலும் சமூகநீதிக்கு எதிரான செயல். அதற்கு காரணம் எஸ்.சி, எஸ்.டி பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரு.2.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்திட மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் ஆணையின் மூலமாக பெற்றால் மட்டுமே ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திலிருந்து 8 லட்சமாக தமிழகத்தில் மாற்ற இயலும்.

ஆனால், இது தொடர்பாக எவ்வித நடவடிக்கைளும் எடுக்காத காரணத்தினால் தமிழகத்தில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்பு அடையும் சூழ்நிலை நிலவுகின்றது.

இதனால் குறிப்பாக அரசு துறையில் அடிப்படை எஸ்.சி, எஸ்.டி ஊழியர்களின் குழந்தைகள் கூட இந்த கல்வித் உதவித் தொகை பெற இயலாமல் உள்ள சூழ்நிலை உள்ளது.

எனவே, எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவியர்கள் கல்லூரிகளில் பயில அவர்களது பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி அனைவரும் கல்வி உதவி தொகை பெற்றிட மத்திய அரசுக்கு உரிய ஆணை பிறப்பிக்க பரிந்துரைசெய்து தமிழகத்தில் நடைமுறைபடுத்த வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img