கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் கணிதத்துறையும், இலங்கையின் கொழும்பு பல்கலைக் கழகமும் இணைந்து மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் கணிதத்தில் மாடலிங் யுத்திகள் குறித்த சர்வதேச மாநாட்டை 2 நாட்கள் நடத்தியது.
இம்மாநாடானது கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ் துவக்க உரையுடன் ஆரம்பமானது.
இதில் பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் பரிமேலழகன் பேசுகையில்,
“இன்றைய உலக சவால்களை எதிர் கொள்வதற்கும் பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சிகளை வளர்ப்பதற் கும் கணித படிமமாக்களின் முக்கியத் துவம் வாய்ந்தது” என்றார்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா வாழ்த்துரை வழங்கினார். மேலும், கொழும்பு பல்கலைக் கழகத்தின் கணிதவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சஞ்சீவ் பெரரோ சிறப்புரையாற்றினார்.
இதன் தொடர்ச்சியாக மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ் வெளியிட முனைவர் சஞ்சீவ் பெரரோ பெற்றுக் கொண்டார்.
இம்மாநாட்டில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னா லஜியைச் சேர்ந்த சுனில் ஜேக்கப் ஜான், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பிரம்மானந்தம் ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண் டனர்.