ஊட்டியில் உள்ள நீலகிரி லைப்ரரியில் அக்டோபர் 6-, 7ம் தேதிகளில் ஏழாவது இலக்கிய விழா நடைபெறுகின்றது. நேற்றைய விழாவில் தமிழ்நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 7வது ஊட்டி இலக்கிய விழா (ஊட்டி லிட்ஃபெஸ்ட் 2023) என்ற தலைப்பில் துவங் கியுள்ளது. இந்த விழாவில் ஊட்டியின் இருநூறாவது ஆண்டு விழாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அதன் இலக்கியம், கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் செழுமையை வண்ணமயமாக கொண்டாடப்பட உள்ளது.
இலக்கிய விவாதத்திற்கு அப்பால், ஊட்டிலிட்ஃபெஸ்ட் 2023 நீலகிரி உயிர்க்கோளத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தையும், பல்வேறு சமூகங்களையும் விளக்கும் வகையில், நகரின் இயற்கை சாரத்தை ஒளிரச் செய்து, அதை தனித்துவமாக்குகிறது.
விழாவில் முக்கியமான உரையாடல்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் அறிவுசார் விவாதங்கள், நேரடி உரையாடல்கள், கண்காட்சிகள், கலை விளக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான இந்திய கிளாசிக்கல், ப்ளூஸ் மற்றும் ஜாஸ் கச்சேரிகள் ஆகியவை நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களின் ஒருவரான பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அப்சரா ரெட்டி ஜெர்ரி பின்டோ கல்கி கோச்லின் மன்சூர் கான் சுதா மூர்த்தி உட்பட ஏராளமான பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.