fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பிரமிக்க வைக்கும் விண்வெளி கண்காட்சி

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பிரமிக்க வைக்கும் விண்வெளி கண்காட்சி

உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கல்லூரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கல்லூரி நிர் வாகம் சார்வில் காண்போரை பிரமிக்க வைக்கும் விதமாக விண்வெளி கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்தும் உலக நாடுகள் விண்வெ ளியில் செய்துள்ள சாதனைகள் மற்றும் மேற்கொள்ள இருக்கும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை உலக விண்வெளி வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வாரத்தில் பள்ளி-கல்லூரிகள் மற் றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விண்வெளி சார்ந்த கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ் தவான் விண் வெளி மையம், இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் விண்வெளி கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சியை மேக் நிறுவனத்தின் தலைவர் அத்தப்ப கவுண்டர், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

கண்காட்சியில் விண்வெளி தொடர்பான விளக்கங்கள், விண்வெளிக்கு இதுவரை அனுப் பப்பட்ட செயற்கைக் கோள்களின் மாதிரிகள், ராக்கெட்டுகளின் மாதிரிகள், விண்வெளியில் இதுவரை அறியப்பட்ட கோள்கள் மற்றும் துணைக்கோள்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாணவ, மாணவிகள் நேரடியாகக் கலந்துரையாடினர். விண்வெளி ஆய்வுகள் தொடர்பான சிறப்பு காணொளிகள் காட்சிப் படுத்தப்பட்டன.

தொடர்ந்து விண்வெளியை மையமாக வைத்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், வினாடி வினா, எழுத்து போட்டி, பேச்சு போட்டி, நேரடி மாதிரி வடிவமைப்பு போட் டிகள் நடைபெற்றது இதுகுறித்து கல்லூரியின் செயலாளரும் இயக்கு நருமான வாசுகி கூறியதாவது:

எங்கள் கல்லூரிக்கு இந்தாண்டு பொன்விழா ஆண்டு. இதனால் உலக விண்வெளி வாரத்தை சிறப்பாகக் கொண்டாட நினைத் தோம். இஸ்ரோ இந்த நிகழ்ச்சியை எங்கள் கல்லூ ரியில் நடத்த தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக் கிறது. இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் விதமாக இந்த கண்காட்சி நடை பெற்று வருகிறது. கிராமப்புற மாணவர்கள், மலைவாழ் மாணவர்கள் எங்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

அவர்கள் மத்தியில் இந்த கண்காட்சி விண்வெளி மிகுந்த புரிதலை ஏற்படுத்தும். நிறைய அப்துல்கலாமும், அண்ணாதுரையும் இந்த மண்ணிலிருந்து வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையி டுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தினமும் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வாசுகி கூறினார்.

இன்று (7ம் தேதி) வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என விழா கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கல்லூரியின் தலைவர் ஆறுச்சாமி, இஸ்ரோ விஞ்ஞானி கிரஹதுரை, கல்லூரியின் முதல்வர் லக்ஷ்மணசாமி, ஸ்ரீ ஹரி கோட்டா தலைவர் சுப்பானந்தன் அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், மற்றும் என்.ஜி.பி கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img