fbpx
Homeபிற செய்திகள்கோத்தகிரியில் தேசிய வாலிபால் போட்டி

கோத்தகிரியில் தேசிய வாலிபால் போட்டி

சிஐஎஸ்சிஇ தேசிய வாலிபால் போட்டிகளை ஐசிஎஸ்இ, ஸ்கூல் சர்ட்டி பிகேட் (ஐஎஸ்சி) உடன் செயிண்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி, ஜூனியர் கல்லூரி இணைந்து நடத்தியது.

இந்தியாவில் இருந்து 12 பிராந்தியங்களில் இருந்து 355 மாணவர்களும், 11 பிராந்தியங்களில் இருந்து 344 மாணவிகளும் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கான போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச வாலிபால் வீரர் அஜித்லால் சந்திரன், அகமதாபாத் மாதவ் இண்டர்நேஷனல் பள்ளி முதல்வர் வினோத் காந்திகட்லா ஆகியோர் பங்கேற்றனர்.

மாணவிகளுக்கான போட்டிகளில் சர்வதேச வாலிபால் வீராங்கனை பவுலின் பிரிஷா, காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், மேற்கு வங்கம் சைலேஷ் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.

14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
மாணவர்களுக்கு 69 போட்டிகளும், மாணவிகளுக்கு 68 போட்டிகளும் நடந்தன. சிறப்பு விருந்தினர் பவுலின் பிரிஷா, செயிண்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி சேர்மன் பி.பி.தனராஜன், முதல்வர் டாக்டர் சரோ தனராஜன், செயல் இயக்குநர் சமீத் தனராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கேடயங்களை வழங்கி பாராட்டினர்.

நான்கு நாட்கள் இந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img