fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் 11,056 பேரும் நலம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் 11,056 பேரும் நலம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் பிற மாநிலத் தொழிலாளர்களுடன் நல்லுறவு கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட் சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்குப் பின் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் உதகமண் டலத்தில் தமிழக அரசின் சார்பில் மருத்துவக் கல்லூரி ரூ.461.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டு, திறக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலமாக மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடப் பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. அதன் கட்டுமானப் பணிகளில் தமிழ்நாடு மற்றும் வடமாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 252 தொழிலாளர்களும், பீகாரைச் சார்ந்த 185 தொழிலாளர்களும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 247 தொழிலாளர்களும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 138 தொழிலாளர்களும், ஒடிசாவைச் சேர்ந்த 128 தொழிலாளர்களும் என மொத்தம் 950 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் பிற மாநிலத் தொழிலாளர்கள் சுமார் 11,056 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

முதல்வர் உத்தரவுப்படி தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முட்டைகளுடன் கூடிய உணவும், ஸ்வெட்டர், கம்பளி ஆடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளும் மூன்று மாத கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு வசதிகள்

அத்துடன் தொழிலாளர்களுக்கு தேவையான சுகாதாரமான கழிப்பிட வசதிகள் மற்றும் முழுமையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. கடந்த ஒரு வார காலமாக தேவையற்ற வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே, ‘வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது, பாதுகாப்பாக இருக்க நான் இருக்கிறேன்’ என்று ஓர் அறிக்கை யினை முதல்வர் வெளியிட்டார்.

அதனடிப்படையில், துறையின் அமைச்சராக உள்ள காரணத்தினால் அவர்களைச் சந்தித்து வரும்படி முதல்வர் அறிவுறுத்தினார். அதன்பேரில், நீலகிரி எம்.பி., மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தலைமைப் பொறியாளர், கல்லூரி முதல்வர் ஆகியோருடன் வடமாநிலத் தொழிலாளர்களுடன் கலந்துரை யாடியதில், வடமாநிலத் தொழி லாளர்கள் அனைவரும் சந்தோ ஷமாக உள்ளதாக கூறினர்.

முதல்வரின் தொடர் முயற்சி யினால் கொரோனா தொற்று காலத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால், அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு தொழில்களில் 11,056 பேர் பணிபுரிகின்றனர். இவர்களின் 0 முதல் 6 வயது குழந்தைகள் 1250 பேர் அங்கன்வாடி மையத்திற்குச் செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத் தவரை, இந்த தேவையற்ற வதந்திகளுக்கு தொழிலாளர்கள் இடம் தராமல் ஒற்றுமையாகவும், பாதுகாப்பாகவும் இருந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

முன்னதாக மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம், அடிப்படை வசதியான தங்கும் வசதி, உணவு, மருத்துவ வசதி போன்றவை குறித்து கேட்டறிந்தனர். இரவு உணவை அளித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் முனைவர் பிரபாகரன், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (கோவை) இளஞ்செழியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் கட்டுமானம்) அய்யா சாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, வட்டாட்சியர் ராஜ சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img