கோவையில் வண்ணப் பொடிகளை பூசி வட இந்தியர்கள் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டா டப்படும் ஒன்றாகும்.
இந்த பண்டிகையின் போது வண்ண வண்ண பொடிகளை ஒருவருக் கொருவர் பூசிக் கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், காந்திபார்க், வெரைட்டி ஹால் பகுதிகளில் அதிக மான வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
வண்ண பொடிகள்
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன் றாக கூடி ஒருவர் ஒருவர் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு விஷ்ணு கடவுளை வழிபட்டு பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர்.
அதன்படி கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹோலிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டு, பாடல்கள் இசைத்தும், நடனமாடியும் ஹோலியை கொண்டாடினர்.