உதகையில் 126வது மலர் கண்காட்சி வருகிற மே மாதம் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மலர் காட்சியினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறந்த பூங்காக்களுக்கு, பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூங்கா போட்டிக்கான விண்ணப்ப படிவங்கள் உதகை, தோட்டக்கலை உதவி இயக்குநர், அரசு தாவரவியல் பூங்கா அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பூங்காக்களின் உரி மையாளர்கள் உதகமண்டலம், அரசு தாவரவியல் பூங்காவில் போட்டிக்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்கள் நாளை வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 27ம் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குநர், அரசு தாவரவியல் பூங்கா அலுவலகத்தில் பதிவு ஒன்றுக்கு ரூ.100 வீதம் கட்டணத்துடன் செலுத்தப்பட வேண்டும்.
சிறந்த பூங்காக்களுக்கான தேர்வு செய்யும் குழு 29.04.2024 முதல் 05.05.2024 வரை நீலகிரி மாவட்டத்தி லுள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மலர்க்காட்சி அன்று நடத்தப்படும் பல்வேறு போட்டிகளுக்கு 06.05.2024 முதல் 08.05.2024 வரை போட்டியாளர்கள் ஒரு பதி விற்கு ரூ.50 வீதம் செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர், அரசு தாவரவியல் பூங்கா அலுவலகத்தினை (தொலை பேசி எண்-0423-2442545) மூலம் அணுகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.