குழந்தைகளுக்குக் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் பிலியரி அட்ரேசியா என்ற பிறவி நோயால் பாதிக்கப்பட்ட 1 அரை வயது குழந்தைக்கு “கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை” கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
இதில், அனுபவம் வாய்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆனந்த் பரதன், ஜெயபால், பிரகாஷ், விகாஷ் மூண்ட், குழந்தைகள் மயக்க மருந்து நிபுணர் பிரேம் சந்தர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சித்தார்த் புத்தவரப்பு, பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சை மருத்துவர்கள் கிருஷ்ண சமீரா, இந்திராதேவி ஆகியோர் கொண்ட குழு இச்சிகிச்சையை செய்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் மூலம் குழந்தைக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தற்போது குழந்தை குணமடைந்து தனது கிராமத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது.
இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினரை எஸ் என் ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணஸ்வாமி, தலைமை நிர்வாக அதிகாரி, மருத்துவ இயக்குனர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.