கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்க தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகளுடன், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கமலகண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தன், பண்டரிநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீர்வளத்துறை , மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.