Homeபிற செய்திகள்தாயான பெண்களுக்கு வளைகாப்பு ஒயாசிஸ் கருவுறுதல் மையம் அசத்தல்

தாயான பெண்களுக்கு வளைகாப்பு ஒயாசிஸ் கருவுறுதல் மையம் அசத்தல்

சென்னையைச் சேர்ந்த ஒயாசிஸ் கருவுறுதல் மையம், IVF மூலம் கருத் தரித்த தம்பதிகளை கவுரவிப்பதற்காக வெகு ஜன வளைகாப்பு நிகழ்ச் சியை நடத்தியது.

ஒயாசிஸ் கருவுறுதல் மைய முதுநிலை ஆலோசகர், கருவுறுதல் நிபுணர் டாக்டர் அபர்ணா விஸ்வ கிரண் கூறியதாவது: தம்பதிகள் ஒரு வருடத்திற்குப் பிறகும் கருத்தரிக்க முடியாவிட் டால், கருவுறுதல் நிபுணரை அணுகுவது அவசியம். கருத்தரித்தல் அல்லது கருவுறுதல் சிகிச்சைகளை ஒத்திவைப்பது பாதிப்புகளை உருவாக்கும்.

வயது அதிகரிப்பதனால் பெண்களின் கருமுட்டை இருப்பு குறைகிறது. கருத் தரிப்புக்கு முந்தைய ஆலோசனைகளை பெறுவது தம்பதியர் கருத் தரிப்பு வாய்ப்புகளின் அடிப்படையில் அவர் கள் எந்த இடத்தில் நிற்கிறார் கள் என்பதை அறிய உதவும் என்றார்.

மூத்த ஆலோசகர் மற்றும் கருவுறுதல் நிபு ணர் டாக்டர் ஹேமா வைத்தியநாதன் கூறியதா வது: மலட்டுத்தன்மையும் மற்ற உடல் நலப்பிரச்சினை களைப் போலவே ஆகும். எனவே அச்சம் மற்றும் தடைகளை வெல்வது முக்கியம்.

விந்தணு குறைபாடு கொண்ட ஆண் களும் தந்தையாவதற்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் எங்களிடம் உள் ளன. புற்றுநோயாளிகள் கூட கருத்தரிக்க உதவும் கருவுறுதல் பாதுகாப்பு நுட்பங்களை நாங்கள் வழங்குகிறோம் என்றார்.

கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் டிமகேஸ்வரி பேசுகையில், “IUI, IVF, டோனார் சிகிச்சைகள் போன்ற அனைத்து வகையான கருவுறுதல் சிகிச்சைகளை யும் வழங்குகிறோம்.

ஒரு முழுமையான அணுகுமுறையின் மூலம், தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் சிகிச்சையுடன் உணவு மற்றும் எடை மேலாண்மை மூலம் தம்பதிகள் பெற்றோராக உதவுகிறோம். உள் வைப்புக்கு முந்தைய மரபணு சோதனை மற்றும் எண்டோமெட்ரியல் ரிசெப்டிவிட்டி அரே போன்ற நுட்பங்கள் மூலம், அதிக வெற்றி விகிதங்களை வழங்க முடியும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img