இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம் (IRMRA) ஏற்பாடு செய்த 24வது ரப்பர் மாநாட்டை, சென்னை வர்த்தக மையத்தில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலர் சஞ்சீவ் தொடங்கி வைத்தார்.
எக்ஸ்போ மற்றும் ரப்பர் தொழில் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட ஐ.ஆர்.எம்.ஆர்.ஏ., தலைவர் டாக்டர். கே. ராஜ்குமார், ஐ.ஆர்.எம்.ஆர்.ஏ., தலைவர் டாக்டர் ஆர்.முகோபாத்யாய்,“ பல்வேறு துறைகளில் இருந்து டிரெண்டிங் தொழில்நுட்பத்தை சீரமைத்தல், ரப்பர் தொழில் துறையை வலுபடுத்த பல்வேறு நிபு ணர்களின் கருத்துகளுக்கு ஒரு தனித்துவமான தளத்தை இந்த நிகழ்வு வழங்குகிறது. உலகளாவிய ரப்பர் பொருளாதாரம் CY 2028 க்குள் USD 50 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரப்பர் பொருளாதாரம் மொத்த ரப்பர் நுகர்வில் 2-வது பெரியது மற்றும் ஒட்டுமொத்த மொத்த ரப்பர் உற்பத்தியில் 5-வது பெரியது. 2021-22 நிதியாண்டில் 3560 மெட்ரிக் டன்னாக இருந்த ஏற்றுமதி 2022-23 நிதியாண்டில் 3700 மெட்ரிக் டன் இயற்கை ரப்பர் ஏற்றுமதி செய்துள்ளது. FY 22-23 w.r. to FY 21-22 இல் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு கிட்டத்தட்ட 4% ஆகும்.
FY 22-23 -ல் ரப்பர் மற்றும் அதன் பொருள்களின் ஏற்றுமதி ரூ.37597 கோடி.கடந்த ஆண்டு 21- 22 நிதியாண்டில் ரூ.34559 கோடி.
இயற்கை ரப்பர் நாட்டின் முக்கிய உற்பத்தி சொத்துக்களில் ஒன்றாகும்.
உற்பத்தியாளர்களின் நலனை பல்வேறு சலுகைகள் மூலம் காப்பாற்ற வேண்டும்.
உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
MSME துறைகள் வசதிகளைப் பெறுவதற்கு தொழில்நுட்ப செயல்விளக்க மையம் மற்றும் திறன் மையங்கள் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும்.
அரசு ‘ஆத்மநிர்பார் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘உலகளாவிய போட்டித் திறனுக்கான’திட்ட வரைபடத்துடன் இணைந்த உள்நாட்டு ரப்பர் தயாரிப் புகளை உருவாக்க நட்புரீதியான கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் எம்எஸ்எம்இயை ஊக்குவிக்க வேண்டும்.
தொழில்துறை தற்போது எதிர் கொள்ளும் சவால்கள் ரப்பர் ரசாயனங்கள் மற்றும் அவற்றின் உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஆகும்.
ஆண்டு வளர்ச்சி விகிதம் 8 – 9%, உயரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, மூலதனச் சந்தைகளில் விரைவான விரிவாக்கம் மற்றும் FDI வரத்து ஆகியவற்றுடன், உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பட்டத்தை இந்தியா பெருமையுடன் கூறுகிறது.
இன்று சுமார் 212 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப் பட்டுள்ள ரப்பர் தயாரிப்புகளுக்கான உலகளாவிய சந்தையும் 2025-ம் ஆண்டளவில் இருமடங்காக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
ஷீலா தாமஸ், ஜே.கே டயர் இண்டஸ்ட்ரீஸ் எம்.டி., அன்ஷுமன் சிங்கானியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.