fbpx
Homeபிற செய்திகள்விவசாயிகளுக்கு மானிய விலையில் 3332 விஎஸ்டி பவர் டில்லர் வேளாண் சாதனங்கள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் 3332 விஎஸ்டி பவர் டில்லர் வேளாண் சாதனங்கள்

தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு மானிய விலையில் 3332 விஎஸ்டி பவர் டில்லர் வேளாண்மை சாதனங்களை தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறை வினியோகித்தது.

இந்தியாவில் சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்குப் பொறுத்தமான திறன்மிக்க வேளாண் சாதனமாக விஎஸ்டி பவர் டில்லர்கள் திகழ்கின்றன.
சாமான்யர்களும் வாங்கிப் பயன்படுத் தக்கூடிய மிக மிதமான விலையில் இவை கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இயந்திரங்களை வரப்பு உருவாக்கல், ஊடுசாகுபடி, களையகற்றல் மற்றும் சேற்றுழவு ஆகிய பணிகளுக்கு பவர் டில்லர்களை சிறப்பாக பயன்படுத்த முடியும். இஞ்சி, மஞ்சள், கரும்பு, காய்கறி பயிர்கள், பருத்தி, துவரை மற்றும் தோட்டப் பயிர்கள் ஆகியவற்றிற்கு மிகச்சிறப்பாக பொருந்தக்கூடிய, பல்வேறு பயிர்களுக்கும் உகந்த சிறப்பு இயந்திரமாக இதனை பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு மாநிலத்தில் சிறிய பரப்பிலான வயல்களிலும், தோட்டங்களிலும் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடும், விவசாயிகள் எதிர்கொள்கிற சவால்களின் கடுமையை எளிதாக்கும் குறிக் கோளோடும் மற்றும் வேளாண் உற்பத்தி திறனை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடும் பவர் டில்லர்களை, வசதியற்ற, எளிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு வினியோகிக்கும் நிகழ்வு மாநிலமெங்கும் நடத்தப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை மாநகரில் பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ் நாடெங்கிலும் நடைபெற்ற இந்த மாபெரும் வினியோக நிகழ்வுகளில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள் ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இச்செயல்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் விவசாயிகள் ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைக்கப்பட்ட பண்ணை மேம்பாட்டுத் திட்டம்’ (KAVIADP) என்பதன் கீழ் பயனடையும் கிராமங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img