விழுப்புரத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தமிழ்நாடு வெல்டிங் கடை உரிமையாளர்கள் சங்கம் 3-வது மாநில மாநாடு விமுப்புரம் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் சூரிய தீபன் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் பாலாஜி. மாநில பொருளாளர் மோகன் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் முகமது இத்ரீஸ் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அவர்கள் பேசுகையில் மின்சாரம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் தங்கம் போல் இரும்பு விலை அதிகரிப்பதால் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசு மானியத்துடன் வங்கி கடன் உதவி மற்றும் வீடு இல்லாமல் கஷ்டப்படும் உறுப்பினர்களுக்கு அரசின் உதவி இலவச வீட்டு மனை பட்ட வழங்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி வரியால் தொழிலாளர்கள் மிகவும் சிறமபடும் நிலைக்கு தள்ளபடும் நிலையை தளர்த்தக் கோரியும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் சேர்க்கையை எளிமை படுத்த வேண்டும் என்றும் மாநில மாநாட்டின் தீர்மானங்களை கோரிக்கையாக முன்வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.