பெரியநாயக்கன்பாளையத்தில் செயல் பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாணவர்களை நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒயிட் மேவரிக், பிளாக் பேந்தர்ஸ், ரெட் டைட்டன்ஸ் மற்றும் ப்ளூ பிரேவ்ஸ், என அணிகளுக்கு பெயரிட்டு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது.
ஆண்களுக்கான கால்பந்து, வாலிபால், இறகுப்பந்து, கபடி, செஸ் மற்றும் கிரிக்கெட் மாணவிகளுக்கான கோ-கோ, இறகுப்பந்து வாலிபால், செஸ் மற்றும் த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டன.
நேற்று இறுதி நாளான விளையாட்டு தின விழாவில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, வட்டு எறிதல், குண்டு எறிதல், போன்ற தடகள விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்விகள் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய பொறியியல் படிக்கும் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கி ஆரோக்கியமாக தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட விளையாட்டு தங்களுக்கு ஊக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும் என தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த விளையாட்டு தின விழாவின் சிறந்த விளையாட்டு வீரராக அபினேஷ் மற்றும் சூர்யா ஆகியோர் தேர்வு பெற்றனர். சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இரண்டாம் ஆண்டு செல்வி. சஞ்சனா தேர்வு பெற்றார்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெறப்போகும் அணி என்று கணக்கிட்டு பார்க்கும் பொழுது இரண்டு அணிகள் தலா 55 புள்ளிகளுடன் இருப்பதனால் இரண்டு அணிகளுக்கும் (ஒயிட் மெவரிக்ஸ் மற்றும் பிளாக் பேந்தர்ஸ்) சாம்பியன் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனரும் தலைவருமான சண்முகம் தலைமை தாங்கினார், யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர். முனைவர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் உடற்கல்வித்துறை இயக் குனர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்து அனைவரையும் வரவேற்றார்.