நிசான் மோட்டார் இந்தியா அதன் பிக், போல்டு, பியூட்டிஃபுல் SUV, நிசான் மேக்னைட் GEZA சிறப்பு பதிப்பை ரூ.7,39,000 (எக்ஸ்- ஷோரூம், டெல்லி) முதல் துவங்கும் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Magnite GEZA மேம்பட்ட இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம், ஆற்றல் நிரம்பிய செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள் ஆகியவற்றின் அற்புதமான கலவையை வழங்குகிறது.
நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: நிசான் மேக்னைட் GEZA ஸ்பெஷல் எடிஷன், SUV பிரிவில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் பிரீமியம் ஆடியோ மற்றும் இன்ஃபோ டெயின்மென்ட் அனுபவத்துடன் அற்புதமான, மதிப்பை மேம்படுத்தும் வாழ்க்கை முறையை வழங்குகிறது.
பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அம்சங்களின் வலிமையை அடிப்படையாக் கொண்ட சிறந்த தயாரிப்பு முன்மொழிவாகத் திகழ்கிறது என்றார்.
Magnite GEZA சிறப்பு பதிப்பை அனைத்து நிசான் ஷோரூம்களிலும் 11,000 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம். இது மோனோடோன் வண்ணங்களின் வரம்பில் கிடைக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பரந்த அளவிலான தேர்வுகளை வழங்குகிறது. Magnite GEZA ஸ்பெஷல் எடிஷன், சிறந்த விற்பனையான B-SUVயை மேம்படுத்துகிறது.
நிசான் மேக்னைட் சிறந்த, மிகக் குறைந்த பராமரிப்புச் செலவாக கி.மீ.க்கு 35 பைசா (50,000 கிமீக்கு) கொண்டுள்ளது. 2 ஆண்டுகள் (50,000 கிமீ) உத்தரவாதத்துடன் மன அமைதி வருகிறது, இது குறைந்த செலவில் ஐந்து ஆண்டுகள் (அல்லது ஒரு லட்சம் கிமீ) வரை நீட்டிக்கப்படலாம்.



