கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, நேற்று (வெள்ளிக்கிழமை) எட்டாவது முறையாக பள்ளிகளுக்கு இடையிலான வினாடி வினாப் போட்டியை நடத்தியது. இன்கீயூஸ்டீவ் 2026 என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்வில் கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 22 பள்ளிகளிலிருந்து 41 அணியினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் பிலிப் ஆர்.ஜே.ஃபௌலர், முதல்வர், துணை முதல்வர்கள் மற்றும் வினாடி வினா மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் பள்ளியின் முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன் வரவேற்புரை வழங்கினார். மேலும், இந்நிகழ்வின் வினாடி வினா நடுவரான ஷைலேந்திர பன்சாலி, கோவையில் உள்ள கும்பத் அண்ட் கோ நிறுவனத்தின் மூத்த பங்குதாரரும் பட்டயக் கணக்காளருமான அவரையும், புகழ்பெற்ற தொழில்முனைவோரும் ஆர்வமிக்க வினாடி வினா பங்கேற்பாளருமான சி.வி.கோவிந்தராஜன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

முதற்கட்டப் போட்டியில் மாணவர்களின் பொது அறிவு, விழிப்புணர்வு மற்றும் தர்க்கச் சிந்தனைத் திறன்கள் சோதிக்கப்பட்டன. இதில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் பள்ளி, சின்மயா ரெசிடென்ஷியல் இன்டர்நேஷனல் பள்ளி, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, வித்யா நிகேதன் பொதுப் பள்ளி மற்றும் கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகளின் அணிகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றன.
இறுதிச்சுற்றில் பொது அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இலக்கியம், வரலாறு, விளையாட்டு, கலை மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் சவாலான வினாக்கள் கேட்கப்பட்டன. இப்போட்டி மாணவர்கள் தங்களுடைய அறிவுத் திறனை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையின் முக்கியத்துவத்தை உணரவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில், முதல் பரிசை சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியைச் சேர்ந்த பிரத்யுத் செந்தில்குமார் மற்றும் தேவான்ஷ் மஜும்தார் ஆகியோர் பெற்றனர். இரண்டாம் பரிசை கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த ஆர்.அஸ்வத் மற்றும் அரவ் ஜெயின் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். மூன்றாம் பரிசை பி.எஸ்.பி.பி. மில்லேனியம் பள்ளியைச் சேர்ந்த விஷ்வஜித் ராஜா மற்றும் மகிழன்.பி. ஆகியோர் பெற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக வெற்றி பெற்ற அணிகளுக்குப் பணப்பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் துணை முதல்வருமான முனைவர் வி.திவாகரன் நன்றியுரை வழங்கினார்.
அறிவு, ஆர்வம் மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை ஆகியவற்றைச் சிறப்பிக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இவ்விழா அமைந்தது.



