fbpx
Homeபிற செய்திகள்உலக சாதனையில் முத்திரை பதித்த நிர்மலா மகளிர் கல்லூரி

உலக சாதனையில் முத்திரை பதித்த நிர்மலா மகளிர் கல்லூரி

கோவை, ஆக. 1
சென்னை மற்றும் லண்டன் திறன் மேம்பாட் டுக் குழு இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை நிர்மலா மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு உலக சாதனைப்பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட் டன. சென்னை குன்றத்தூ ரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,575-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய நூல்களில் ஒரே நேரத்தில் கையொப்பமிட்டு உலக சாதனை படைத்தனர். இதில் நிர்மலா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 46 பேராசிரியர்கள் மற்றும் 4 மாணவிகள் பங்கேற்றனர்.
பேராசிரியர்களை பங்கேற்க ஊக்குவித்த கல்லூரி முதல்வர் அருட் சகோதரி மேரி பபியோலா வுக்கு உலக சாதனைக் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பங் கேற்ற அனைத்து பேராசிரியர் களுக்கும் உலக சாதனைப் பதக்கங்கள் மற்றும் சான் றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த சாதனைக்கு கல்லூரி செயலர் அருட் சகோதரி குழந்தை தெரஸ் மற்றும் துணை முதல்வர் அருட்சகோதரி ஜாக்குலின் மேரி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img