fbpx
Homeபிற செய்திகள்இந்திய தொழில் வர்த்தக சபையில் பெரு நிறுவன பத்திரச்சந்தை அவுட்ரீச் நிகழ்ச்சி

இந்திய தொழில் வர்த்தக சபையில் பெரு நிறுவன பத்திரச்சந்தை அவுட்ரீச் நிகழ்ச்சி

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் தொழிற்துறை மேம்ப டுத்துவதற்கான பெரு நிறுவன பத்திரச் சந்தை குறித்த அவுட்ரீச் நிகழ்ச்சி நடத்தியது
நிகழ்ச்சியில் செபி அமைப் பின் செயல் இயக்குனர் மணிந்தர் சீமா மற்றும் பிஎஸ்சி அமைப்பின் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன் ராமமூர்த்தி. செபி அமைப்பின் முதல்நிலை பொது மேலாளர் சரவணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்களை இந்திய தொழில் வர்த்தக சபை துணைத் தலைவர் அண்ணாமலை வர வேற்று பேசினார்.
செபி மற்றும் பிஎஸ்சி. என்எஸ்சி அமைப்பின் நிர் வாகிகள் பேசும்போது, கோவை மாவட்டத்தில் பல்லாயிரக்க ணக்கான தொழில் நிறுவனங்கள் உள்ளது இவற்றில் தொழிலை மேம்படுத்துவதற்கு வங்கியைச் சார்ந்தவர்கள் இதுவரை இருந்து வரு கின்றனர்.
பங்கு சந்தை மூலம் அதிகளவு நிதிகளை திரட்டி தொழிலை மேம்படுத்துவதற்கு அரிய வாய்ப்பு உள்ளது இவற்றை கோவை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண் டும்.
கோவை மாவட்டத்தில் 39 நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளது இந்த நிறுவனங் களும் பங்கு சார்ந்த பதிவுகளில் ஈடுபட்டால் அதிக அளவு முதலீட்டை திரட்டி விரிவு படுத் தலாம்.
நாட்டில் தற்போது 59 லட்சம் கோடி மட்டுமே தொழில் நிறுவ னங்கள் பங்கு சார்ந்த பதிவுகள் மூலம் ஈடுபட்டுள்ளது, என்று கூறினர். நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனம் சார்ந்த நிர்வாகிகள் பங் கேற்று தங்கள் சந்தேகங்களை கேள்வி யாக எழுப்பினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் இந்திய தொழில் வர்த்தக சபை கௌரவ செயலாளர் பிரதீப் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img