ஜிம்பாப்வே சம்மிட்-2026 நிகழ்வையொட்டி, ஜிம்பாப்வே நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் கோவையில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்து, கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை செயல்பாடு களை பார்வையிட்டனர்.

கே.பி.ஆர். குழுமத் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் பிரதிநிதிகளை வரவேற்றனர்.
தொடர்ந்து கல்வி ஒத்துழைப்பு, மாண வர் பரிமாற்றம், உதவித் தொகை திட்டங்கள் மற்றும் சர்வதேச கல்வி வாய்ப்புகள் குறித்து கலந்து ரையாடப்பட்டது.
இதில் ஜிம்பாப்வே அதிபரின் கல்வி உதவித் தொகை சிறப்பு ஆலோசகர் ரேமோர் மச்சிங்குரா, இந்தி யாவுக்கான ஜிம்பாப்வே தூதர் ஸ்டெல்லா ந்கோமோ உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், மாணவர்களின் புதுமைத் திட்டங்கள் மற்றும் தொழில்துறை கூட்டாண்மை நிறுவனங் களைப் பார்வையிட்டு, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற் சிகள் குறித்து அறிந்து கொண்டனர்.



